மன்னார் மனிதப்புதைகுழி: மாதிரிகளை ஃபுளோரிடா ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பத் திட்டம்

மன்னார் மனிதப்புதைகுழி: மாதிரிகளை ஃபுளோரிடா ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பத் திட்டம்

மன்னார் மனிதப்புதைகுழி: மாதிரிகளை ஃபுளோரிடா ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

10 Oct, 2018 | 3:36 pm

Colombo (News 1st) மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளை ஃபுளோரிடா ஆய்வுக்கூடத்திற்கு அனுப்புவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

மன்னாரில் சதொச கட்டடம் அமைப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட காணியில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மன்னார் நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த மே மாதம் 28 ஆம் திகதி முதல் 84 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் ஊடாக இதுவரையில் 175 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

169 மனித எலும்புக்கூடுகள் அகற்றப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்