அருவைக்காட்டிற்கு குப்பை வேண்டாம்: அறவழிப் போராட்டத்திற்கு பெருகி வரும் ஆதரவு

அருவைக்காட்டிற்கு குப்பை வேண்டாம்: அறவழிப் போராட்டத்திற்கு பெருகி வரும் ஆதரவு

அருவைக்காட்டிற்கு குப்பை வேண்டாம்: அறவழிப் போராட்டத்திற்கு பெருகி வரும் ஆதரவு

எழுத்தாளர் Staff Writer

10 Oct, 2018 | 8:55 pm

Colombo (News 1st)  புத்தளம் – அருவைக்காடு பிரதேசத்தில் குப்பை கொட்டும் திட்டத்திற்கு எதிரான சத்தியாக்கிரகப் போராட்டம் 12 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

புத்தளம் இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில், புத்தளம் – கொழும்பு முகத்திடல் பகுதியில் இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து புத்தளம் பாலாவி நகரிலிருந்து புத்தளம் – கொழும்பு முகத்திடல் வரை வாகனப் பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

இந்த வாகனப் பேரணியை புத்தளம் மாவட்டத்தில் உள்ள இளைஞர் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்