நிர்ணய விலையில் பெரிய வெங்காயம் கொள்வனவு

நிர்ணய விலையில் பெரிய வெங்காயம் கொள்வனவு

by Staff Writer 09-10-2018 | 11:29 AM
மாத்தளை மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நிர்ணய விலையில் பெரிய வெங்காயம் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக மாவட்ட விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்காக, 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 70,000 மெற்றிக் தொன் பெரிய வெங்காயத்தைக் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.