2018 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

2018 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு

by Staff Writer 08-10-2018 | 7:09 PM

2018 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நோர்டாவுஸ் (William Nordhaus), போல் ரோமர் (Paul Romer) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய பொருளாதார ஆய்வுகளை மேற்கொண்டமைக்காக இந்தப் பரிசு இவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நோர்டாவுஸ் பருவநிலை மாற்றத்தால் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஆய்வு செய்துள்ளார். போல் ரோமர் உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணராக செயலாற்றுகின்றார். வளமான பொருளாதாரத்தை நிபுணர்கள் எவ்வாறு வளர்ப்பது என்பது தொடர்பில் இவர் ஆய்வு செய்துள்ளார். இது நீண்டகால அடிப்படையிலான பொருளாதாரத்திற்கு உதவும் கண்டுபிடிப்பாக கருதப்பட்டு போல் ரோமருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுவீடனைச் சேர்ந்த விஞ்ஞானி அல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.