ஹிருணிகா குற்றத்தை ஏற்றார் - நீதிமன்றில் அறிவிப்பு

ஹிருணிகா குற்றங்களை ஏற்க தயார் - நீதிமன்றில் அறிவிப்பு

by Staff Writer 08-10-2018 | 6:56 PM

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டு குறுகிய முறையில் வழக்கை நிறைவுசெய்யத் தீர்மானித்துள்ளதாக, அவர் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி அனுர செனவிரத்ன இன்று (08) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அறிவித்தார்.

இது தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி விடயங்களை ஆராய அனுமதி பெற்றுத் தருவதாக பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்தார். கோரிக்கையை ஆராய்ந்த கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஷஷீ மகேந்திரன் வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டார். 2015 டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி தெமட்டகொட பகுதியில் இளைஞர் ஒருவரை பலவந்தமாக கடத்தி தாக்குதல் மேற்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவருடைய பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரிகள் 8 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தொடரப்பட்டது.