மழையுடனான வானிலை நீடிக்கும்

மழையுடனான வானிலை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

by Staff Writer 08-10-2018 | 2:12 PM
Colombo (News 1st) வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் தோன்றியிருந்த தாழமுக்க வலயமானது, தாழமுக்கமாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், நாளை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மேல், வட மேல், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடனான மழையின்போது காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை வீசக்கூடும். மின்னல் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏனைய செய்திகள்