இன்டர்போல் தலைமை அதிகாரி சீனாவில் கைது

இன்டர்போல் தலைமை அதிகாரியும் சீனாவின் பொதுப் போக்குவரத்து பிரதியமைச்சருமான மெங் ஹொங்வெய் சீனாவில் கைது

by Staff Writer 08-10-2018 | 7:27 PM

சீன அதிகாரிகளினால் தடுத்துவைக்கப்பட்டுள்ள சர்வதேச பொலிஸின் தலைமை அதிகாரியான Meng Hongwei இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பிரான்ஸில் அமைந்துள்ள சர்வதேச பொலிஸின் தலைமைக் காரியாலயத்தில் இருந்து சீனாவுக்கு பயணித்த நிலையில், Meng Hongwei காணாமல்போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் முறையிட்டுள்ளனர். இதன்பின்னர் அவரைத் தேடும் பணிகள் பிரான்ஸ் அரசினால் முடுக்கிவிடப்பட்டிருந்தன. இதேவேளை, மெங் ஹோங்வெய், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச பொலிஸ் தெரிவித்துள்ளது. நேற்று அனுப்பட்ட இராஜினாமா கடிதம் உடன் அமுலுக்கு வந்ததாகவும் இன்டர்போல் அறிவித்துள்ளது. சீனாவின் ஊழலுக்கு எதிரான முன்னெடுப்புக்களில் அண்மையில் இலக்குவைக்கப்பட்டுள்ள உயர்மட்ட அதிகாரி இன்டர்போலின் தலைமை அதிகாரியான சீனாவின் Meng Hongwei என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சீனாவின் பொது பாதுகாப்புத்துறையின் பிரதி அமைச்சர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. சீன ஜனாதிபதி ச்சி ஜின் பிங்கின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை சரியானதும் சாதுரியமானதுமென அந்நநாட்டு பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.