சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 07-10-2018 | 6:52 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ஹம்பாந்தோட்டை துறைமுகம் விரைவில் சீனாவின் முன்னிலைக் கடற்படையின் தளமாக மாறலாம் என அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். 02. ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் 2  வருட கால அவகாசம் கோரியிருந்தமை தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிரித்தானியாவின் ஆசிய பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் ஃபீல்ட்டுக்குத் தௌிவுபடுத்தியுள்ளார். 03. இறுதிக்கட்ட யுத்தத்தில் 8 மாத குழந்தைப் பருவத்தில் தனது கையை இழந்த ராகினி எனும் மாணவி, புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளார். முல்லைத்தீவு – முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவியான இவர், புலமைப்பரிசில் பரீட்சையில் 169 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். 04. மாகாணசபையின் ஏனைய உறுப்பினர்களைப் போலவே, தனக்கும் 40,000 அமெரிக்க டொலருக்கும் குறைவான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 05. படுக்கையறைகளில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. அமெரிக்க ஜனாதிபதியுடன் இணைந்து செயலாற்ற விரும்புவதாக மன்னர் மொஹமட் பின் சல்மான் தெரிவித்துள்ளார். 02. ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பாகிஸ்தானிய எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டுள்ளார். விளையாட்டுச் செய்திகள் 01. இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிகளுக்கு இடையிலான 2ஆவது பயிற்சிப் போட்டி, சீரற்ற வானிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டது. 02. கலாநிதி ஆர்.எல். ஹேமன் கிண்ண வோட்டர் போலோ போட்டியில் கொழும்பு ரோயல் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை சூடியது.