உயர்நீதிமன்ற பிரதம நீதியரசராக பிரெட் கவானா நியமனம்

அமெரிக்க உயர்நீதிமன்ற பிரதம நீதியரசராக பிரெட் கவானா நியமனம்

by Staff Writer 07-10-2018 | 10:50 AM
அமெரிக்க உயர்நீதிமன்றத்தின் பிரதம நீதியரசராக ப்ரெட் கவானா (Brett Kavanaugh), பதவியேற்றுள்ளார். கவானாவுக்கு ஆதரவாக, செனட் சபையில் 50 வாக்குகளும் எதிராக 48 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. 53 வயதான ப்ரெட் கவானாவுக்கான பதவிப்பிரமாணத்தை, பிரதம நீதியரசர் ஜோன் ரொபர்ட்ஸ் மற்றும் ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் என்டனி கென்னடி ஆகியோர் வழங்கினர். ப்ரெட் கவானா மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த நிலையில், அவர் பிரதம நீதியரசராகப் பதவியேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த சில தினங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவானாவிடம் செனட் சபையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 11 மணித்தியால விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், புதிய பிரதம நீதியரசருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கவானாவின் நியமனம் மூலம், ஜனாதிபதி ட்ரம்பின் அரசியல் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக சர்வசே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.