IMF-இற்கு புதிய பொருளாதார தலைமையதிகாரி நியமனம்

சர்வதேச நாணய நிதியத்தின் புதிய பொருளாதார தலைமையதிகாரியாக இந்திய வம்சாவளிப் பெண் நியமனம்

by Bella Dalima 06-10-2018 | 9:57 PM
Colombo (News 1st)  சர்வதேச நாணய நிதியத்தின் புதிய பொருளாதார தலைமையதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார தலைமைப் பொறுப்பிற்கு பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும். வர்த்தகம், அந்நிய செலாவணி, நிதிக்கொள்கை மற்றும் அரச கடன் முகாமைத்துவம் தொடர்பில் நிபுணத்துவமுள்ள அவருக்கு, வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரம் மற்றும் பூகோளமயமாதல் தொடர்பில் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ள கீதா, ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றியுள்ளார். அமெரிக்க பிரஜாவுரிமை பெற்றுள்ள கீதா கோபிநாத், இந்தியாவில் பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.