முத்து விநாயகத்திற்கு விளக்கமறியல்

கால்நடை அபிவிருத்தி சபை தலைவர் முத்து விநாயகத்திற்கு விளக்கமறியல்

by Staff Writer 06-10-2018 | 7:43 PM
Colombo (News 1st)  ஆறு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் முத்து விநாயகம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் துலினி அமரசிங்க முன்னிலையில் சந்தேகநபர் இன்று அஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் முத்து விநாயகம் இலஞ்சம் பெறுவதற்கு உதவிய மற்றுமொரு கணக்காளரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான மெல்சிறிபுர பண்ணையிலுள்ள உணவகத்தை இரண்டு வருடங்களுக்கு வாடகைக்கு வழங்குவதற்காக, சந்தேகநபரால் 12 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரப்பட்டிருந்ததாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சந்திரசிறி குறிப்பிட்டார். பின்னர் இலஞ்சப் பணத்தை 6 இலட்சமாகக் குறைத்து அதனைப் பெற்றுக்கொள்ளும் போது தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் நேற்று (05) கைது செய்யப்பட்டார்.