அமெரிக்க ஜனாதிபதியுடன் இணைந்து செயலாற்ற விரும்பம்

அமெரிக்க ஜனாதிபதியுடன் இணைந்து செயலாற்ற விரும்பும் மொஹமட் சல்மான்

by Staff Writer 06-10-2018 | 1:37 PM
அமெரிக்க ஜனாதிபதியுடன் இணைந்து செயலாற்ற விரும்புவதாக மன்னர் மொஹமட் பின் சல்மான் தெரிவித்துள்ளார். அத்துடன், நண்பர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பானதெனவும் நல்ல நண்பர்களே ஒருவருடைய நன்மை தீமை இரண்டையும் கூறக்கூடியவர்கள் எனவும் சவுதி அரேபிய இளவரசர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவினுடைய ஆதரவு இல்லாமல் எந்தவொரு மத்தியகிழக்கு நாட்டினாலும், இரண்டு வாரங்கள் இருக்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அத்துடன், அமெரிக்காவில் இடம்பெற்ற ஒரு பேரணியில், சவுதி பங்கேற்றதாகவும் விமர்சித்திருந்தார். இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு சில தினங்களில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சஞ்சிகை ஒன்றிற்கு சவுதி இளவரசர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். இரு தலைவர்களும் இணைந்து, மத்தியகிழக்கிலே, தீவிரவாதம், தீவிரவாத சிந்தனைகள், பயங்கரவாதம் மற்றும் அதற்கான நாட்டுக் கோரிக்கைகள் உள்ளிட்ட விடயங்களிலே தீர்வுகளை எட்டியதாகவும், ஏராளமானவற்றைச் சாதித்துள்ளதாகவும் இளவரசர் மேலும் தெரிவித்துள்ளார்.