மண்சரிவு எச்சரிக்கை விடுப்பதற்கு தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் நடவடிக்கை

மண்சரிவு எச்சரிக்கை விடுப்பதற்கு தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் நடவடிக்கை

மண்சரிவு எச்சரிக்கை விடுப்பதற்கு தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2018 | 7:15 am

Colombo (News 1st) நிலவும் மழையுடனான வானிலையால், சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பதற்கு, தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பதுளை, பசறை, பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கடந்த முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஹல்தமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டாம் நிலைக்குரிய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட புவியியலாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் சில பகுதிகளில் மண்மேடு சரிந்துவீழ்ந்துள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் காமினி ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மழையுடனான வானிலையால் பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மஹாவெலி அதிகாரசபை தெரிவித்துள்ளதோடு, தெதுறு ஓயாவின் 8 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் நிக்கவரெட்டிய, வாரியபொல, ரஸ்னாயகபுர, கொபெய்கனே மற்றும் பிங்கிரிய ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு குருநாகல் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்