சீரற்ற வானிலையால் தடைப்பட்ட இங்கிலாந்து – இலங்கை 2ஆவது பயிற்சிப்போட்டி

சீரற்ற வானிலையால் தடைப்பட்ட இங்கிலாந்து – இலங்கை 2ஆவது பயிற்சிப்போட்டி

சீரற்ற வானிலையால் தடைப்பட்ட இங்கிலாந்து – இலங்கை 2ஆவது பயிற்சிப்போட்டி

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2018 | 2:18 pm

இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிகளுக்கு இடையிலான 2ஆவது பயிற்சிப் போட்டியை கைவிடுதவற்கு நடுவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி இன்று (06) கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் நடைபெறவிருந்தது.

எனினும், சீரற்ற வானிலையால் போட்டி கைவிடப்பட்டது.

எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் பயிற்சி ஒருநாள் போட்டியில்
இங்கிலாந்து அணி டக்வேர்த் லூவிஸ் விதிமுறையில் 43 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டித் தொடர் சிரச டி வி மற்றும் டி வி வன் தொலைக்காட்சியில் நேரடியாக ஔிபரப்பப்படுவதும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்