அரசியலமைப்புப் பேரவை உறுப்பினர்கள் நியமனம்

அரசியலமைப்புப் பேரவை உறுப்பினர்கள் நியமனம் குறித்து சபாநாயகர் அறிக்கை

by Staff Writer 06-10-2018 | 6:44 AM
Colombo (News 1st) அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கை வெளியிட்டுள்ளார். பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரினால் பெயரிடப்பட்ட 5 உறுப்பினர்கள் மற்றும் சிறு கட்சிகள், ஏனைய குழுக்களினால் பெயரிப்படப்பட வேண்டிய உறுப்பினர்கள் தொடர்பிலான இறுதித் தீர்மானம் இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக அந்த பெயர் விபரங்களை ஜனாதிபதிக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிகாட்டப்படுள்ளது.

ஏனைய செய்திகள்