ஜனாதிபதி தலைமையில் மன்னாரில் தேசிய மரநடுகை விழா

ஜனாதிபதி தலைமையில் மன்னாரில் தேசிய மரநடுகை விழா ஆரம்பம்

by Staff Writer 05-10-2018 | 8:22 PM
Colombo (News 1st)  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய மரநடுகை விழா மன்னாரில் இன்று நடைபெற்றது. ''வனமாக்கல்'' தேசிய மரநடுகை திட்டத்தின் ஆரம்ப விழா மன்னார் - தம்பனைக்குளம் பகுதியில் இன்று நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மக்கள் பிரதிநிதிகள், முப்படையினர், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். தேசிய மரநடுகை விழாவை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, அங்கு கூடியிருந்த மாணவர்களுடனும் கலந்துரையாடினார். இதேவேளை, சுற்றாடல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்த ''வனமாக்கல்'' தேசிய மரநடுகை திட்ட மாநாடு, மன்னார் - நகர சபை மைதானத்தில் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது சுற்றாடலை பாதுகாப்பதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.