இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

by Bella Dalima 05-10-2018 | 4:52 PM
இந்தியாவில் நேற்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல், டீசலின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், 2 ரூபா 50 சதத்தினால் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பதாலும் அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதாலும் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்வடைந்து வருகின்றது. இதனையடுத்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனையடுத்து, எரிபொருளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. விலை குறைப்பினால் ஓராண்டுக்கு 21,000 கோடி இந்திய ரூபா இழப்பு ஏற்படும் எனவும் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.