புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 04-10-2018 | 6:17 AM
Colombo (News 1st)  உள்நாட்டுச் செய்திகள் 01. புத்தளம் – அருவைக்காடு மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா. அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுசென்றுள்ளனர். 02. ஒலுவில் துறைமுகம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று (03) அங்கு சென்றிருந்தபோது, பிரதேச மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 03. அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக கண்டி மற்றும் கொழும்பு மகசின் சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். 04. கடும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 5 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. 05. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் நாளை (05) வௌியாகவுள்ளன. 06. நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லா உட்பட 4 சந்தேகநபர்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு நேற்று (03) உத்தரவிட்டப்பட்டது. வௌிநாட்டுச் செய்திகள் 01. ஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 02. இயற்பியலுக்கான நோபல் பரிசு, கனடாவைச் சேர்ந்த டோனா ஸ்டிரிக்லேண்ட் (Donna Strickland) என்ற பெண்மணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 55 வருடங்களுக்குப் பின்னர் முதல்தடவையாக இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 03. ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள சில தடைகளை நீக்குமாறு அமெரிக்காவிற்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளையாட்டுச் செய்தி 01. இளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு, பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரியின் நீச்சல் வீரரான அகலங்க பீரிஸுக்கு கிட்டியுள்ளது.

ஏனைய செய்திகள்