இக்ரம் உல் ஹக் - கபில வைத்தியரத்ன சந்திப்பு 

பாகிஸ்தானின் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்னவுடன் கலந்துரையாடல்

by Staff Writer 04-10-2018 | 8:35 PM
Colombo (News 1st)  பாகிஸ்தானின் பாதுகாப்பு செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் இக்ரம் உல் ஹக் இன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்னவை சந்தித்துக் கலந்துரையாடினார். பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, இரு நாடுகளுக்கும் அவசியமான சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கலாநிதி ஷஹீட் அஹமட் ஹஷ்மட்டும் கலந்து கொண்டிருந்தார். ஐந்தாவது தடவையாகவும் இடம்பெறவுள்ள பாகிஸ்தான் - இலங்கையின் ஆயுதப்படை பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் நேற்று (03) நாட்டை வந்தடைந்தார்.