பொருளாதார வழித்தடத் திட்டத்தில் சவுதி சேராது

சீனாவின் பொருளாதார வழித்தடத் திட்டத்தில் சவுதி அரேபியா சேராது: பாகிஸ்தான் தெரிவிப்பு

by Bella Dalima 04-10-2018 | 4:17 PM
சீனாவின் பொருளாதார வழித்தடத் திட்டத்தில் சவுதி அரேபியா சேராது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுடன் இணைந்து சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டம் எனும் பெயரில் புதிய திட்டத்தை சீனா செயற்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், சீனா முதல் பாகிஸ்தான் வரையிலும் பல்வேறு சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் 3ஆவது பங்குதாரராக சவுதி அரேபியாவும் விரைவில் இணையவிருப்பதாக பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பவாத் சௌதரி கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தானின் திட்டமிடுதல் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் குஸ்ரு பக்தியார் செய்தியாளர்களிடம், ''சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டம், எங்கள் இரு நாடுகளுக்கு இடைப்பட்டதாகும். இதில் சவுதி அரேபியா 3-ஆவது பங்குதாரராக சேராது," என குறிப்பிட்டுள்ளார்.