ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா – நிக் ஜோனஸ் திருமணம்?

ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா – நிக் ஜோனஸ் திருமணம்?

ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா – நிக் ஜோனஸ் திருமணம்?

எழுத்தாளர் Bella Dalima

04 Oct, 2018 | 5:29 pm

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் அவரது காதலர் நிக் ஜோனசுக்கும் ஜோத்பூரில் உள்ள பிரபல அரண்மனையில் திருமணம் நடைபெறவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தி திரையுலகின் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்துள்ளார்.

சில ஆண்டுகளாக ஹொலிவுட் படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் கவனம் செலுத்தி வந்தார். அப்போது அமெரிக்காவைச் சேர்ந்த பாடகரான நிக் ஜோனசுடன் நட்பு ஏற்பட்டது. நிக் ஜோனஸ் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது சிறியவர். இந்த ஆண்டு மத்தியில் தங்கள் காதலை ஒப்புக்கொண்ட இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்டு மாதம் மும்பையில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். இந்த ஆண்டு இறுதியில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று செய்தி வௌியானது.

நிக் ஜோனஸ் காதலி பிரியங்கா சோப்ராவைப் பார்க்க அடிக்கடி இந்தியா வருவார். கடந்த வாரம் வந்தவர் பிரியங்கா சோப்ராவுடன் சேர்ந்து ஜோத்பூரில் உள்ள உமைத் பவான் அரண்மனையை சுற்றிப் பார்த்தார். தங்களது திருமணத்தை நடத்துவதற்காக அவர்கள் அரண்மனையைப் பார்வையிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த அரண்மனையைத் தவிர இன்னும் சில இடங்களையும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். இடம் இன்னும் உறுதியாகவில்லை. ஆனால், ஜோத்பூரில் தான் திருமணம் என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.

பிரியங்கா சோப்ரா ஹொலிவுட் படங்களில் நடித்தாலும் இந்திய பாரம்பரிய முறைப்படி தான் தனது நிச்சயதார்த்தம் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பிரியங்காவின் எண்ணத்திற்கு நிக் ஜோனசும் மதிப்புக்கொடுத்து குடும்பத்துடன் இந்தியா சென்றார். பிரியங்கா, நிக் ஜோனஸ் நிச்சயதார்த்தம் இந்திய முறைப்படி பிரமாண்டமாக நடைபெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்