டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் புதிய உபகரணங்கள்

டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய உபகரணங்கள்

by Staff Writer 03-10-2018 | 7:07 AM
Colombo (News 1st) டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய உபகரணங்களை கொழும்பு நகர எல்லைக்குள் பயன்படுத்தவுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாநகர சபையின் ஒத்துழைப்புடன், இன்று (03) முதல் குறித்த உபகரணங்கள் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக கொழும்பு நகரிற்குள் 1,000 உபகரணங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் நேற்று வரையான டெங்கு ஒழிப்பு வாரக் காலப்பகுதியில் நுளம்பு பெருகக்கூடிய 77,000 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.