செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 03-10-2018 | 5:47 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ரயில் பயணங்களுக்கான கட்டணத் திருத்தம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து அறிவிப்பதற்காக, ரயில்வே திணைக்களத்தினால் இரண்டு தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. 02. கொரியாவில் 19 வருடங்களுக்கு முன்னதாக இடம்பெற்ற கூட்டுப் பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 03. ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான மிகப்பெரிய போர்க்கப்பலான காகா ஹெலிகொப்டர் போக்குவரத்துக் கப்பல் அண்மையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 04. அமைச்சர் ஒருவருக்கு வெளிநாட்டிலிருந்து கிடைத்ததாகக் கூறப்படும் பாரிய தொகை நிதி தொடர்பில் மத்தியவங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியிடம் கேள்வியெழுப்பிய போது, அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என பதிலளித்துள்ளார். 05. ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 40,000-இற்கும் அதிக இலங்கையர்கள் பொதுமன்னிப்புக் காலத்தில் நாட்டிற்கு மீளத் திரும்பவுள்ளனர். வௌிநாட்டுச் செய்திகள் 01. மலேஷியா உடனடியாக பால்ய திருமணங்களை நிறுத்தவேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. 02. மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, நேற்று (02) டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். விளையாட்டுச் செய்தி 01. அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் இரண்டாம் நாளான நேற்று வடக்கு மற்றும் மலையக மாணவர்கள் பதக்கங்களை வென்றனர்.