ஈரான் மீதான தடைகளை நீக்குமாறு உத்தரவு

ஈரான் மீதான தடைகளை நீக்குமாறு சர்வதேச நீதிமன்றம் அமெரிக்காவிற்கு உத்தரவு

by Bella Dalima 03-10-2018 | 5:11 PM
ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள சில தடைகளை நீக்குமாறு சர்வதேச நீதிமன்றம் அமெரிக்காவிற்கு உத்தரவிட்டுள்ளது. மனிதாபிமான உதவிப்பொருட்கள் மற்றும் சிவில் விமானப்போக்குவரத்து ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டுமென சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் இது குறித்து முறைப்பாடு செய்திருந்தது. குறித்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அமெரிக்காவினால் ஈரான் மீது தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தடைகளை நீக்குமாறு அமெரிக்காவிற்கு உத்தரவிடக்கோரி, சர்வதேச நீதிமன்றத்திடம் ஈரான் வலியுறுத்தியிருந்த நிலையில், அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.