by Staff Writer 03-10-2018 | 2:20 PM
Colombo (News 1st) இளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரியின் நீச்சல் வீரரான அகலங்க பீரிஸுக்கு கிட்டியுள்ளது.
இவ்வருட இளையோர் ஒலிம்பிக் விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள ஒரேயொரு நீச்சல் வீரர் அகலங்க பீரிஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இளையோர் ஒலிம்பிக் விழா எதிர்வரும் 6 ஆம் திகதி ஆர்ஜென்டினாவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் ஆடவர்க்கான ( BACKSTROKE ) நீச்சல் போட்டியில் வெளிப்படுத்திய திறமைக்கு அமைவாக அகலங்க பீரிஸுக்கு இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.
இளையோர் ஒலிம்பிக் விழாவில் 50 மீற்றர் BACKSTROKE, 100 மீற்றர் BACKSTROKE மற்றும் 50 மீற்றர் ( BUTTERFLY ) நீச்சல் போட்டிகளில் அகலங்க பீரிஸ் பங்கேற்கவுள்ளார்.
அகலங்க பங்கேற்கவுள்ள நீச்சல் போட்டிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
50 மீற்றர் BACKSTROKE, 100 மீற்றர் BACKSTROKE மற்றும் 50 மீற்றர் ( BUTTERFLY ) நீச்சல் போட்டிகளில் அகலங்க பீரிஸ், தேசிய சாதனையாளராக திகழ்வதும் குறிப்பிடத்தக்கது.