ஹஜ் கடமைக்கு செல்லவுள்ளோர் நவம்பர் 28 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு

ஹஜ் கடமைக்கு செல்லவுள்ளோர் நவம்பர் 28 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு

ஹஜ் கடமைக்கு செல்லவுள்ளோர் நவம்பர் 28 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Oct, 2018 | 8:07 pm

Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டு புனித ஹஜ் கடமைக்கு செல்லவுள்ளோர் எதிர்வரும் நவம்பர் மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு எண்ணியுள்ளவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

இதேவேளை, இணையத்தின் ஊடாக பதிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் இலங்கையில் இருந்து 3000 பேருக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்