வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு (CCTV)

வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு (CCTV)

வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு (CCTV)

எழுத்தாளர் Bella Dalima

02 Oct, 2018 | 8:26 pm

Colombo (News 1st) அண்மையில் தங்காலையில் வாகனங்கள் திருத்தும் நிலையமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் CCTV காட்சி இன்று வெளியிடப்பட்டது.

வாகனங்கள் திருத்தும் நிலையத்தின் உரிமையாளரே துப்பாக்கிதாரிகளின் இலக்காகும்.

இந்தக் குற்றச்செயலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர், தங்காலை – விதாரணதெனிய மற்றும் ரன்ன ஆகிய பகுதிகளில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவர் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புபட்ட ஒருவர் என பொலிஸார் கூறினர்.

ரன்ன வாராந்த சந்தையில் வரி அறவீடு தொடர்பில் ஏற்பட்ட மோதலே இந்தக் கொலைக்கு காரணம் என இதுவரையான விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களைத் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்