மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினம் இன்று

மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினம் இன்று

மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினம் இன்று

எழுத்தாளர் Staff Writer

02 Oct, 2018 | 10:48 am

மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, இன்று டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்தியாவின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து, அகிம்சை வழியில் போராடியவர் மகாத்மா காந்தி.

அவரது பிறந்தநாளான ஒக்டோபர் 2ஆம் திகதி, காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் இன்று (02) காலை பிரதமர் மோடி காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் பல்வேறு கட்சித் தலைவர்களும் பலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்