பரியேறும் பெருமாளுக்காக கதிரைப் பாராட்டிய விஜய்

பரியேறும் பெருமாளுக்காக கதிரைப் பாராட்டிய விஜய்

பரியேறும் பெருமாளுக்காக கதிரைப் பாராட்டிய விஜய்

எழுத்தாளர் Bella Dalima

02 Oct, 2018 | 4:13 pm

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’.

இதில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைதளத்தில் பலரும் ‘பரியேறும் பெருமாள்’ படம் குறித்து பகிர்ந்து வருகிறார்கள். இது விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனையடுத்து, விஜய் கதிரைத் தொடர்புகொண்டு பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறார்.

ரொம்ப சந்தோஷமா இருக்கிறது கதிர். உன் படத்தைப் பற்றித்தான் எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். கேட்கும் போது ரொம்ப சந்தோஷப்பட்டேன். ரொம்ப பெரிய வெற்றி இது. மக்களே ஒரு படத்தை இவ்வளவு பெரியளவுக்கு பேசுகிறார்கள் என்றால் மிகப்பெரிய வெற்றி. இந்த சந்தோஷத்தைக் கொண்டாடு. இன்னும் நான் படம் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு கூப்பிடுகிறேன் என்று என்னிடம் சொன்னார். விஜய் சொன்னவுடனே ஒட்டுமொத்த ரசிகர்களும் சொன்ன மாதிரி இருந்தது.

என கதிர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்