கொரியாவில் 19 வருடங்களுக்கு முன்னரான பாலியல் வன்புணர்வு குறித்து தகவல்

கொரியாவில் 19 வருடங்களுக்கு முன்னரான பாலியல் வன்புணர்வு குறித்து தகவல்

கொரியாவில் 19 வருடங்களுக்கு முன்னரான பாலியல் வன்புணர்வு குறித்து தகவல்

எழுத்தாளர் Staff Writer

02 Oct, 2018 | 11:31 am

கொரியாவில் 19 வருடங்களுக்கு முன்னதாக இடம்பெற்ற கூட்டுப் பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கையர் மூவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர நேற்று ஊடக சந்திப்பில் வௌிக்கொணர்ந்தார்.

எனினும், இந்த மரபணுக்களுடன் தொடர்புடையவர்களை கொரிய அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவர்கள் அந்த மரபணுக்களை களஞ்சியப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

12 வருடங்களுக்கு பின்னர் அதாவது 2010 ஆம் ஆண்டு கொரியாவில் தொழிலுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

குறித்த மரபணு மாதிரிகள் 1998 ஆம் ஆண்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட யுவதியின் உள்ளாடையில் இருந்த மரபணுக்களுடன் பொருந்தியுள்ளன.

எவ்வாறாயினும், கொரிய சட்டத்திற்கமைய துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் 10 வருடங்களுக்குள் வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

10 வருடங்கள் கடந்துள்ளதால் தேகு நீதிமன்றம் குறித்த வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்