உள்நாட்டுத் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் தீர்மானம்

உள்நாட்டுத் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் தீர்மானம்

உள்நாட்டுத் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

02 Oct, 2018 | 8:39 am

Colombo (News 1st) உள்நாட்டுத் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை 50 வீதத்தால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கான தேவையில், சுமார் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாக தெங்கு செய்கை அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

எனினும், இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் தரம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பில் தற்போது பிரச்சினைகள் எழுந்துள்ளதாக சபையின் தலைவர் கபில யகன்தாவல தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு முதல் இதுவரை சந்தைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தேங்காய் எண்ணெயின் மாதிரிகள் மூலம், 75 வீதமானவை நுகர்வுக்கு உகந்ததல்ல என்பது கண்டறியப்பட்டது.

சந்தைகளில் காணப்படும் பெரும்பாலான தேங்காய் எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டவை என்பதும் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்