இந்தோனேஷிய நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200 ஆக உயர்வு

இந்தோனேஷிய நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200 ஆக உயர்வு

இந்தோனேஷிய நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200 ஆக உயர்வு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

02 Oct, 2018 | 1:03 pm

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமிப் பேரழையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200 ஐ விடவும் அதிகமாகியுள்ளதாக அந்நாட்டு இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்குள்ள மக்கள், உணவு மற்றும் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

அதேநேரம், சம்பவத்தில் உயிர் தப்பியவர்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது.

நிலநடுக்கத்தின் பின்னரான மீட்புப் பணியின்போது, அங்குள்ள தேவாலயம் ஒன்றில் மண்ணிற்குள் புதைந்திருந்த நிலையில் 34 மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அந்நாட்டு செஞ்சிலுவைச் சங்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள், ஜொனூஜ் தேவாலய பயிற்சிப்பாசறையில் நடைபெற்ற பைபிள் முகாம் ஒன்றிலிருந்து காணாமல்போனதாகக் கூறப்பட்ட 86 மாணவர் குழாத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது. அதேநேரம், ஏனைய 52 மாணவர்களின் நிலை குறித்து தகவல்கள் வௌியாகவில்லை.

இந்தோனேஷியாவின் பலு நகரிலுள்ள சுலாவெஸி தீவில் கடந்த வௌ்ளிக்கிழமை, 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்