அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டி:  வடக்கு, மலையக மாணவர்களுக்கு பதக்கங்கள் 

அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டி:  வடக்கு, மலையக மாணவர்களுக்கு பதக்கங்கள் 

அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டி:  வடக்கு, மலையக மாணவர்களுக்கு பதக்கங்கள் 

எழுத்தாளர் Bella Dalima

02 Oct, 2018 | 9:51 pm

Colombo (News 1st)  அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் இரண்டாம் நாளான இன்று வடக்கு மற்றும் மலையக மாணவர்கள் பதக்கங்களை வென்றனர்.

அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றன.

இதில் 20 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான கோலூன்றிப் பாய்தலில் 4.55 மீட்டர் உயரத்திற்குத் தாவிய சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் ஏ. புவிதரன் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.

18 வயதிற்குட்பட்ட மகளிருக்கான உயரம் தாண்டுதலில் யாழ். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் சந்திரகுமார் ஹெரீனா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

போட்டியில் அவர் 1.53 மீட்டர் உயரத்திற்குத் தாவி திறமையை வெளிப்படுத்தினார்​.

20 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் பதுளை சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் சி. அரவிந்தன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினார்.

போட்டியை அவர் 4 .நிமிடங்கள், 01.18 செக்கன்ட்களில் கடந்தார்.

ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்றுள்ள அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நீடிக்கவுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்