மக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

மக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

மக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2018 | 8:09 pm

Colombo (News 1st)  சம்பளத்தை அதிகரித்தல், ETF கொள்ளையை உடனடியாக நிறுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தியும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் எதிர்ப்புப் பேரணியொன்றை இன்று மாலை முன்னெடுத்தது.

வெலிக்கடை சிறைச்சாலை முன்றலில் எதிர்ப்புப் பேரணியை ஆரம்பித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், மருதானை டெக்னிக்கல் சந்தி ஊடாக கொழும்பு கோட்டையைச் சென்றடைந்தனர்.

இதனால் புஞ்சி பொரளை, குலரத்ண மாவத்தை, ஆனந்த மாவத்தை உள்ளிட்ட பல வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் கூறினர்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.