சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

30 Sep, 2018 | 6:32 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

02. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் செயற்பாடு ஒரு வருட காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

03. ஜனநாயக நல்லிணக்கம், சட்டம், மனித உரிமை, ஊடக சுதந்திரம் ஆகியவற்றில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை ஐ.நா. செயலாளர் நாயகம் மற்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

04. மதுபானம் மற்றும் மது சார்ந்த உற்பத்தி தொடர்பில் சர்வதேச கொள்கையொன்று அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

05. இளைய தலைமுறையினரின் பங்குபற்றுதலுடன் முன்னெடுக்கப்படும் V-FORCE செயற்றிட்டத்தின் மற்றுமொரு தேசிய வேலைத்திட்டமாக, இரத்தினபுரியில் ஏற்படும் வௌ்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு அதனைக் குறைக்கும் நோக்கில் களுகங்கையின் இருபுறமும் 4,000 மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.

வௌிநாட்டுச் செய்திகள்

01. இந்தோ​னேஷியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலைத் தாக்கத்தால் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

02. 70 வருடங்களுக்கு முன்னர் வௌியேற்றப்பட்ட தமது சொந்த நிலங்களுக்கும் வீடுகளுக்கும் செல்ல தம்மை அனுமதிக்க வேண்டுமென கோரி கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக காஸா எல்லையில் பலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படை நடத்தும் தாக்குதலில் இதுவரையில், 180 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுச் செய்திகள்

01. 19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

02. ஆசிய கிண்ண தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி,  7ஆவது தடவையாக கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்