ஐ.நா. சபையின் கொள்கைகள் சீர்திருத்தப்பட வேண்டும் – சுஷ்மா ஸ்வராஜ்

ஐ.நா. சபையின் கொள்கைகள் சீர்திருத்தப்பட வேண்டும் – சுஷ்மா ஸ்வராஜ்

ஐ.நா. சபையின் கொள்கைகள் சீர்திருத்தப்பட வேண்டும் – சுஷ்மா ஸ்வராஜ்

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2018 | 9:49 am

ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகள் சீர்த்திருத்தப்பட வேண்டுமென இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

சில கொள்கைகள் சீர்திருத்தப்படாமையினால், ஐ.நா. தனது முக்கியத்துவத்தை இழக்க நேரிடுமெனும் என சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

ஐ.நா. சபையின் 73 ஆவது பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபை, தமது கொள்கைகளில் சீர்த்திருத்தம் தேவையென்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன்
நாளை என்பது மிகவும் காலதாமதமாகிவிடும் எனவும் எனவே, மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் சுஷ்மா ஸ்வராஜ் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்களுக்குள் ஒவ்வொரு நாட்டின் இலக்குகளுக்கும் மதிப்பளிக்க வேண்டியது கட்டாயமானதென அவர் மேலும் கூறியுள்ளார்.

ஐ.நா. தன்னுடையது என எந்தவொரு அரசும் உரிமை கொண்டாட முடியாது என்பதுடன், ஒரு நாட்டின் வலியை, இன்னொரு நாடு உணர்ந்து செயலாற்ற வேண்டுமென சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

நிதியுதவி வழங்கும் நாடுகளின் கருவியாக ஐ.நா. மாற்றம் பெறுவதை இந்தியா ஒருபோதும் ஏற்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. பாதுகாப்புப் பேரவையின் கொள்கைகளில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டுமென இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்திவருவதாக கூறிய இந்திய வௌிவிவகார அமைச்சர், நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்புரிமைகளால் பேரவையை கட்டியெழுப்புவது சிக்கலுக்குள்ளாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்