ஐ.நா. கூட்டத்தொடரில் கலந்துகொண்ட ஜனாதிபதி நாடு திரும்பினார்

ஐ.நா. கூட்டத்தொடரில் கலந்துகொண்ட ஜனாதிபதி நாடு திரும்பினார்

ஐ.நா. கூட்டத்தொடரில் கலந்துகொண்ட ஜனாதிபதி நாடு திரும்பினார்

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2018 | 8:26 am

Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 73 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (30) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

ஐ.நா. பொதுச் சபையின் 73 ஆவது கூட்டத் தொடர் கடந்த 24 ஆம் திகதி நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஆரம்பமாகியது.

ஐ.நா. சபையை அனைத்து மக்களுக்கும் நெருக்கமடைய செய்தல், நீதி, அமைதி மற்றும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகங்களுக்கான பூகோள தலைமைத்துவமும், பகிர்ந்த பொறுப்புக்களும் எனும் தொனிப்பொருளில் இந்தக் கூட்டத்தொடர் நடைபெற்றது.

இதன் பிரதான கூட்டத் தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரை நிகழ்த்தியிருந்தார்.

அதேநேரம், ஐ.நா. பொதுச்சபை கூட்டத் தொடருக்கு இணையாக நடைபெற்ற மாநாடுகளிலும் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார்.

அத்துடன், அரசியல் தலைவர்கள் சிலரையும் ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

அதேநேரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவில் வாழும் இலங்கைப் பிரஜைகளையும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்