வைத்தியசாலை நிர்வாகப் பதவி வெற்றிடங்களை நிரப்பத் தீர்மானம்

வைத்தியசாலை நிர்வாகப் பதவி வெற்றிடங்களை நிரப்பத் தீர்மானம்

வைத்தியசாலை நிர்வாகப் பதவி வெற்றிடங்களை நிரப்பத் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2018 | 4:43 pm

Colombo (News 1st) கடந்த 8 வருடங்களாகக் காணப்பட்ட வைத்தியசாலை நிர்வாகப் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

வைத்தியசாலை நிர்வாக சேவையில் 145 வெற்றிடங்கள் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டாக்டர் சுனில் டி அல்விஸ் குறிப்பிட்டார்.

புதிய அதிகாரிகளை நியமிப்பது தொடர்பில் வைத்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டதை அடுத்து, தற்போது நேர்முகப்பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

நேர்முகப்பரீட்சையை அடுத்து தகுதியானவர்களின் ஆவணங்களை பொது சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பியதன் பின்னர் நியமனங்கள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டாக்டர் சுனில் டி அல்விஸ் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்