பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது கல்வீச்சு

பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது கல்வீச்சு

பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது கல்வீச்சு

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2018 | 4:31 pm

Colombo (News 1st) பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொத்துவில் – முருசான பகுதியில் இடம்பெற்ற அமைதியின்மையைக் கட்டுப்படுத்த சென்ற சந்தர்ப்பத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்று (28) அதிகாலையில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரையில் அடையாளங்காணப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்