வரவு செலவுத் திட்டத்தின் நோக்கங்கள் நிறைவேறினவா?

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக எதிர்பார்த்த நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டனவா?

by Bella Dalima 28-09-2018 | 8:23 PM
Colombo (News 1st) கடந்த வருடம் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பொருளாதாரத்தைப் பாதிக்கும் தீர்மானங்கள் பல சந்தர்ப்பங்களில் மாற்றப்பட்டன. இந்த பின்புலத்தில் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக எதிர்பார்த்த நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டனவா? கடந்த வருடம் நவம்பர் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத பல கொள்கைகள் மற்றும் தீர்மானங்கள் கடந்த 10 மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன. வரவு செலவுத் திட்டத்திற்கு அப்பால் நடைமுறைப்படுத்தப்பட்ட அவ்வாறான சில திட்டங்களுக்கு நிதி கோரி, வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரையான 10 மாதங்களுக்குள் 19 குறைநிரப்புப் பிரேரணைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இந்தக் காலத்தில் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்படாது அரசாங்கம் எடுத்த சில தீர்மானங்களாவன... 06.12.2017 - பருப்பு, கருவாடு, தேங்காய் ஆகியவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டது. 26.12.2017 - நாட்டரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டது. 24.02.2018 - உருளைக்கிழங்கு இறக்குமதியின் போது ஒரு கிலோகிராமிற்கு அறவிடப்பட்ட 1 ரூபா வரி 30 ரூபா வரை அதிகரிக்கப்பட்டது. 1.04.2018 - புதிய உள்நாட்டு இறைவரி சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து புதிய வரித்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 17.04.2018 - இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 15 வீத வரி அறிவிடப்பட்டது 27.04. 2018 - 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 245 ஆக அதிகரிக்கப்பட்டது 04.05. 2018 - ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 50 ரூபாவால் அதிகரிப்பு 09.05.2018 - இறக்குமதி செய்யப்படும் பருப்புக்கான வரி அதிகரிக்கப்பட்டது 10.05.2018 - பெட்ரோலின் விலை 20 ரூபாவாலும் டீசலின் விலை 14 ரூபாவாலும் மண்ணெண்ணெய் விலை 57 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டது 22.05.2018 - பஸ் கட்டணங்கள் 12.5 வீதத்தால் அதிகரிப்பு 12.06.2018 - மண்ணெண்ணெய் விலை 70 ரூபாவால் குறைக்கப்பட்டது 18.07.2018 - கம்பெரலிய கிராமிய அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது 10.07.2018 - பெட்ரோலின் விலை 8 ரூபாவாலும் டீசலின் விலை 9 ரூபாவாலும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டது 01.08.2018 - 1000 CC என்ஜின் கொள்ளளவிற்கும் குறைந்த பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டது. 10.08.2018 - 1 லிட்டர் ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 2 ரூபாவாலும் 1 லிட்டர் சுப்பர் டீசலின் விலை 1 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டது 10.09.2018 - 1 லிட்டர் பெட்ரோலின் விலை 4 ரூபாவாலும் 1 லிட்டர் டீசலின் விலை 5 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டது 12.09.2018 - சாதாரண சேவை பஸ் கட்டணங்கள் 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது 26.09.2018 - சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 195 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது 27.09.2018 - அப்பம், பால் தேனீர், உணவு விலைகள் அதிகரிக்கப்பட்டன.