மத்திய வங்கி அதிகாரிகளைக் கைது செய்யுமாறு உத்தரவு

லைபீரிய மத்திய வங்கியின் முன்னாள் அதிகாரிகள் 30 பேரை கைது செய்யுமாறு உத்தரவு

by Bella Dalima 28-09-2018 | 6:19 PM
லைபீரிய மத்திய வங்கியின் முன்னாள் அதிகாரிகள் 30 பேரை கைது செய்யுமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லைபீரிய மத்திய வங்கியில் இருந்து 104 பில்லியன் டொலர் நிதி காணாமற்போனமை தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளவர்களில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மில்டன் விக்ஸ் மற்றும் அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதியின் மகன் சார்லஸ் சர்லிப்பும் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. லைபீரியாவில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கையில் அவ்வாறு செயற்படுவார்களா என்ற கேள்வி எழுகின்றது.