by Staff Writer 28-09-2018 | 3:55 PM
Colombo (News 1st) பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா தமது குரலின் மாதிரியை வழங்குவதற்கு இன்று காலை அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்திருந்தார்.
சுமார் 30 நிமிடங்கள் பிரதி பொலிஸ் மா அதிபரின் குரல் பதிவு செய்யப்பட்டதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி மீதான கொலை முயற்சி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா மற்றும் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் நாமல் குமார ஆகியோர் இடையிலான தொலைபேசி உரையாடல் அரசினால் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குரல் மாதிரியை வழங்குமாறு நாலக்க டி சில்வாவுக்கு நேற்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.