கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் மரணம்: குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் மரணம்: குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் மரணம்: குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2018 | 7:23 pm

Colombo (News 1st) கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளரின் மரணத்துடன் தொடர்புடைய சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றிய வவுனியா – ஆசிக்குளம், கற்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான நடராசா போதநாயகி என்ற பெண் விரிவுரையாளர் கடந்த 21 ஆம் திகதி திருகோணமலை கடற்கரை பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்