புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 27-09-2018 | 5:56 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. வட மாகாணத்தில் அதிகமாக காணப்படும் சுற்றுலா மையங்கள், புராதன சின்னங்கள், வரலாற்றுப் பதிவுகள் மற்றும் பாராம்பரிய கலை, கலாசார விழுமியங்களை வரிசைப்படுத்தி, வரலாற்றுப் பதிவுகளை சுற்றுலாப் பயணிகள் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என சி.வி. விக்னேஷ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். 02. உண்மையிலேயே இது அரசாங்கத்தின் நிலைப்பாடா என்பதை நாம் அறிய வேண்டும் என அமைச்சர் மங்கள சமரவீரவின் டுவிட்டர் பதிவு தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஸ கருத்துத் தெரிவித்துள்ளார். 03. தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் நேற்று (26) நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 04. கண்டியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஊழியர்கள் நேற்று (26) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 05. ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையை புதிய கண்ணோட்டத்தில் பார்க்குமாறு உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 06. மாத்தறை – வல்கம பகுதியில் தந்தையொருவர் மின்சாரத்தைப் பாய்ச்சியதில் மகன் உயிரிழந்துள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு காரணம் காங்கிரஸ் என பிரபாகரன் வந்து கூற வேண்டுமா என இந்திய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். 02. மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான், குழப்பம், மரணம் மற்றும் அழிவை விதைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். விளையாட்டுச் செய்தி 01. இங்கிலாந்திற்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த குழாத்தில் அஞ்சலோ மெத்யூஸூக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.