நரேந்திர மோடிக்கு ஐ.நாவின் சுற்றுச்சூழல் விருது

ஐ.நாவின் சுற்றுச்சூழல் விருது நரேந்திர மோடிக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு

by Staff Writer 27-09-2018 | 2:24 PM
ஐக்கிய நாடுகள் சபையினால் சுற்றுச்சூழல் விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படவுள்ளதாக ஐ.நாவின் சுற்றுச்சூழல் அமைப்பு அறிவித்துள்ளது. சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை தலைமையேற்று வழிநடத்துவதற்காகவும் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிப்போம் என உறுதியேற்றதற்காகவும் பிரதமர் மோடிக்கு ஐ.நாவின் சுற்றுச்சூழல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் முக்கியப் பங்காற்றியதற்காக உலகளவில் 6 பேர் இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் விருதிற்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக துணிச்சலாகவும் புதுமையாகவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டவர்களை கொளரவப்படுத்தும் வகையில் குறித்த விருது அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக ஐ.நாவின் சுற்றுச்சூழல் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகிலேயே முதல்முறையாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, சூரியசக்தியை மட்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட கொச்சி விமான நிலையத்துக்கும் விருது வழங்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.