இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கவுள்ள கத்தார்

இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கவுள்ள கத்தார்

by Staff Writer 27-09-2018 | 1:45 PM
தமது இயற்கை எரிவாயு உற்பத்தியை மேலும் அதிகரிக்கவுள்ளதாக கத்தார் அறிவித்துள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து மற்றும் பஹ்ரேன் உள்ளிட்ட நாடுகளுடனான பொருளாதார நெருக்கடிகளையடுத்து, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக கத்தார் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம், வருடமொன்றில் இயற்கை எரிவாயு உற்பத்தியை 110 மில்லியன் தொன்னாக அதிகரிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக கத்தார் பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. உலகின் பாரிய இயற்கை எரிவாயு விநியோகஸ்தரான கத்தார், ஈரானுடனான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் ஈரானுக்கான பெற்றோல் இறக்குமதி தற்போது 77 மில்லியன் தொன்னாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம், நாட்டின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சியடையும் எனவும் கத்தார் பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.