ராகமயில் ரயிலுடன் மோதுண்டு இருவர் பலி

ராகமயில் ரயிலுடன் மோதுண்டு இருவர் பலி

by Staff Writer 27-09-2018 | 10:51 AM
Colombo (News 1st) ராகம பகுதியில் ரயிலில் மோதுண்டு இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், அனர்த்தத்தில் காயமடைந்த மேலும் இருவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கண்டியிலிருந்து, கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் இன்று 8.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 2 ஆண்களும் 2 பெண்களும் ரயிலுடன் மோதுண்ட நிலையில், அவர்களில் ஆணொருவரும் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர். ராகம பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.