சட்டவிரோத கேபிள் தொலைக்காட்சி சேவைகளை சட்டப்பூர்வமாக்க முயற்சி?

சட்டவிரோத கேபிள் தொலைக்காட்சி சேவைகளை சட்டப்பூர்வமாக்க முயற்சி?

சட்டவிரோத கேபிள் தொலைக்காட்சி சேவைகளை சட்டப்பூர்வமாக்க முயற்சி?

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2018 | 7:25 pm

Colombo (News 1st) சட்டவிரோத கேபிள் தொலைக்காட்சி சேவைகள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளாது மீண்டும் அனுமதிப்பத்திரம் வழங்க முயற்சிகள் இடம்பெறுகின்றமைக்கு இணைய ஊடகவியலாளர்களின் தேசிய அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது அந்த அமைப்பின் உறுப்பினர்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.

சட்டவிரோத கேபிள் தொலைக்காட்சி சேவைகள் தொடர்பில் இணைய ஊடகவியலாளர்களின் தேசிய அமைப்பு ஏற்கனவே பல முறைப்பாடுகளை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ளது.

ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ள இந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளரும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ஒஸ்டின் பெர்னாண்டோ உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.

எனினும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமை குறித்து இன்றைய கலந்துரையாடலின்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்