எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன்: அமலா பால்

எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன்: அமலா பால்

எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன்: அமலா பால்

எழுத்தாளர் Bella Dalima

27 Sep, 2018 | 4:13 pm

ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்து வரும் அமலா பால், எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறியிருக்கிறார்.

ராட்சசன் படத்தை ராம்குமார் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே முண்டாசுப்பட்டி படத்தை இயக்கியவர். ஜி.டில்லிபாபு படத்தைத் தயாரித்துள்ளார்.

ராட்சசன் படக்குழுவினர் சென்னையில் வழங்கிய நேர்காணல் ஒன்றின்போது அமலா பால் கூறியதாவது:-

இந்த படம் மூலம் விஷ்ணு விஷால் நண்பராகி விட்டார். நடிகர் கனவோடு வருபவர்களுக்கு விரக்தி ஏற்பட்டால் விஷ்ணு விஷாலை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். தனது கதாபாத்திரம் சிறப்பாக அமைய நூறு சதவீதம் உழைப்பை கொடுப்பார். இது அவருக்கு திருப்புமுனை படமாக இருக்கும். திகில் படங்களுக்கு ரசிகர்கள் உண்டு. ராட்சசன் நமது மண்சார்ந்த திகில் படமாக இருக்கும். ஜிப்ரான் இசை படத்துக்கு பெரிய பலம். இந்த படத்தில் சொந்தக்குரலில் பேசி இருக்கிறேன். வேறு ஒருவரை டப்பிங் பேச வைப்பது குழந்தையைப் பெற்று மற்றவரிடம் கொடுப்பது போன்றது. நானே டப்பிங் பேசுவேன் என்று ஒப்பந்தம் போட்டு படங்களில் நடிக்கிறேன். எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட விருப்பம் இருக்கிறது. இமயமலைக்கு அடிக்கடி செல்கிறேன். அங்குள்ள இயற்கையான சூழலில் மனம் இதமாகிறது. ஆன்மிக உணர்வு ஏற்படுகிறது. எனது வாழ்க்கையை மாற்றியது இமயமலைதான்.

என அமலா பால் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்