மத்திய கிழக்கில் ஈரானே குழப்பத்தை விதைக்கிறது

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானே குழப்பத்தை விதைக்கிறது - ட்ரம்ப்

by Staff Writer 26-09-2018 | 10:09 AM
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான், குழப்பம், மரணம் மற்றும் அழிவை விதைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றியபோது ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், உலக வல்லரசுகள் கைச்சாத்திட்ட ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியமையை நியாயப்படுத்தும் வகையில் அவருடைய உரை அமைந்திருந்தது. இதேவேளை, இந்தியா பல இலட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டு நடுத்தர வர்க்கமாக மாற்றியிருப்பதாகவும் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், வட கொரியாவுடன் அமெரிக்கா தமது உறவை மேம்படுத்திக் கொண்டமை மற்றும் சீனாவுடனான வர்த்தக உறவில் கடும்போக்கை கடைப்பிடித்தமை ஆகியவை மிகச்சரியான நடவடிக்கைகள் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், அமெரிக்காவின் இறையாண்மையை மதிக்குமாறு பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து நாடுகளிடமும் கோருவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.